ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்’ கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதை என பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம் போலவே புதிய கதை ஓன்று உலாவரத் தொடங்கியுள்ளது. அதாவது, மலேசியாவில் பயங்கர தாதாவாக இருக்கும் கபாலி, மலேசிய ஜெயிலில் இருந்து திரும்பி வந்து, ( திருந்தி ) தன் முதிர்ந்த காலத்தை அவருடைய மகளான தன்ஷிகாவுடன் செலவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு, யாரென்று தெரியாத வில்லன்களால் தன்ஷிகா கடத்தப்பட, அதற்கு பிறகு மகளை காப்பாற்ற பழைய கபாலியாக மாறி வில்லன்களை தேடித் தேடி வேட்டையாடும் கதை தான் ‘கபாலி’.இதில் மிக ,மிக யதார்த்தமான ரஜினியை காட்ட போகிறாராம் பா.ரஞ்சித்.