சுல்தான் படத்தைத் தொடர்ந்து சல்மான்கான், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகிவரும் தபாங் 3ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது சகோதரர் அர்பாஸ் கான் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.இந்நிலையில்,இப்படப்பிடிப்பை காண வந்த சாட்டையால் அடித்து கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தும் கழைக்கூத்தாடிகளிடம் அவர்களின் சாட்டையடி வாழ்க்கையை பற்றியும் பேசியுள்ளார்.
அவர்களது சாட்டையடி நுட்பத்தை கேட்டுக்கொண்டு அதன்படியே அவர்களை போலவே இவரும் சாட்டையால் தன்னை அடித்துகொண்டு அந்த விடியோவைதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர்களுக்குகணிசமான ஒரு தொகையை கொடுத்துஉதவியவர் அவர்கள் வலியில் தானும் கொஞ்சநேரம் பங்கெடுத்தது சந்தோஷம் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. தபாங் 3 திரைப்படம் டிசம்பர் 20 ல் வெளியாகிறது.