முரசொலி நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி திருமண நிச்சயதார்த்த விழா நேற்று சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில்நடந்தது.
இதில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். இந்நிகழ்வுக்கு நடிகர் விஜய்க்கும் செல்வி வீட்டார் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்ற நடிகர் விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டார். அப்போது, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.