உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ வரும் தீபாவளி முதல் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் கடந்த 1980-90களின் பிரபல நடிகையும், நடிகர் நாகார்ஜூனனின் மனைவியுமான அமலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் ‘சத்யா’, ‘வெற்றிவிழா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகையான ‘ஜரினா வாஹாப்’ பும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இப் படம் குறித்த அறிவிப்பு தீபாவளிக்கு பிறகு வெளியாகும் என்றும் கூற ப்படுகிறது.