விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகி இருக்கும் ‘வாழ்க விவசாயி ‘படம்தன்னை வாழவைக்கும் என்று நடிகர் அப்புகுட்டி கூறுகிறார். தல அஜித்குமார் இவருக்காக தனியாக போட்டோ சூட் நடத்தி விதம் விதமான கெட் அப்புகளை வெளியிட்டிருந்தார். வேறு எந்த நடிகருக்குமே தல அப்படி மெனக் கெட்டதில்லை.
அவருக்கு இப்போதுதான் முக்கியமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
இன்று நாட்டில் பற்றி எரிகிற விவசாயிகள் சார்ந்த பிரச்சினையை மையமாக வைத்து ‘வாழ்கவிவசாயி’. என படம் எடுக்கிறார்கள்.
.படம் பற்றிய அனுபவங்களைப்பெருமையுடன் அப்புக்குட்டி இங்கே பகிர்ந்து கொள்கிறார்
‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் எனக்குத் தேடித் தந்தது. அதற்குப் பிறகு .நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான்விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது .
ஒரு நல்லதயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்குநம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப்பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.”என்றார்.
அப்புகுட்டி தன் படத்தின் கதாநாயகி பற்றிக் கூறும்போது ,
” நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது .அவர் என்னை விடஉயரமாக இருப்பாரே .என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை .ஆனால் அவரைப் பற்றி நான்கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது “என்றவர் படப்பிடிப்பில் நடந்தஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார் .
“ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்துபேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
ஆர்ட்டைரக்டர்அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்லமழை பெய்திருந்தது .பரண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது.
முதலில் அதில் நான் ஏறினேன் .அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது.
நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்துஎனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன் .
தவறாகநினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன்.
ஆனால் நீங்கள் “நல்ல வேளை என்னைகாப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந் நேரம்அதிகமாக அடிபட்டிருக்கும்” என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது .”என்கிறார்.
அவருக்கு பஞ்சுப் பொதி மீது விழுந்த உணர்வு வந்திருக்கும்..