இந்தியில் ஜெயா. தமிழில் தலைவி!
நடிகையர் திலகம் பயோபிக் வெற்றியைத் தொடர்ந்து சினிமா உலகம் கையில் எடுத்திருக்கிற முக்கிய வாழ்க்கை வரலாறு பதிவு ஜெயலலிதாவினுடையது.
இயக்குநர் ஏ.எல் .விஜய் இயக்கவிருக்கும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கப்போகிறார் கான்டரவர்சி நடிகை கங்கனா ரனாவத்.
கரடு முரடாக பேசுவார். முரட்டு சுபாவம். ஜெ.கேரக்டருக்கு குணத்தளவில் பொருத்தமான நடிகை.
கடந்த ஒரு வாரகாலமாக இவரை காயத்ரி ரகுராம் நடன ஆசிரியை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். பரதம் கற்றுக் கொடுக்கிறார் பாஜக அனுதாபி.!
100 நடன மாதுகளுடன் ஜெயலலிதா ஆடுவதைப் போன்ற காட்சி படமாக்கப்படவிருக்கிறது.அதற்காகத்தான் இந்த பயிற்சி என்கிறார்கள்.