தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இணையதளம் மூலம் மட்டுமே இனிமேல் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் .,அதே போல் திரையரங்க டிக்கெட் முன்பதிவுகளை முறைப்படுத்தும் வகையில் செயலி உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளது.
‘இனிமேல் அரசு நிர்ணயிக்கும் கட்டணமே அந்தந்த திரையரங்குகளின் தரத்திற்கேற்ப வசூலிக்கப்படும்.
இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை முதலில் சென்னையிலும்,பின் படிப்படியாக மற்ற மாநகரங்களிலும் அமல்படுத்தப்படும்.
திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும், ஒழுங்குபடுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அதன்படி செயல்படுத்தி வருவதாகவும், சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதுடன், அதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.