எந்திரன் படத்தைத் தொடர்ந்து ,தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாக உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக ஹாலிவுட் அர்னால்டும் நடிக்கவிருக்கின்றனர். டிசம்பர் மாதம் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர். இதற்கிடையில் இந்தப் படத்தில் நடிக்க,அமீர்கான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் மறுத்த நிலையில் அமிதாப் பச்சன் இதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.ரஜினியுடன் இணைந்து நடிக்கும் இந்த வாய்ப்பை மிகவும் சந்தோஷத்துடன் அமிதாப் ஏற்றுக் கொண்டுள்ளாராம். ரஜினியும்,அமிதாப்பும் அந்த கனூன் மற்றும் கேர்ஆப்டர் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுக்கவிருக்கும் ஷங்கர் அதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு சுமார் 100 கோடிகளை சம்பளமாக கொடுக்கவும் ஷங்கர் தயங்கவில்லை. இந்தப் படத்தில் நடிக்க,ஷங்கருக்கு அர்னால்டு இதுவரை ஏகப்பட்ட நிபந்தனைகளை வித்திருக்கிறார். மொத்தமாக தனது கால்ஷீட்டை 50 தினங்களுக்கும் சற்று அதிகமாகவே அர்னால்டு கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் இயக்குநர் ஷங்கரிடம் அர்னால்டு தற்போது புதிதாக நிபந்தனை ஒன்றை விடுத்திருக்கிறாராம். அதாவது எந்திரன் 2 படத்தின் கதையை ஹாலிவுட்டில் இருக்கும் திரைக்கதை அமைப்பினரோடு இணைந்து திரைக்கதையை தான் விரும்பியபடி மாற்றி அமைக்கும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அர்னால்டின் நிபந்தனைக்கு ஷங்கர் ஒத்துக் கொள்வாரா அல்லது வேறு யாரையேனும் ஒப்பந்தம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!