படைப்பாளன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சு.திருநாவுக்கரசர் எம்.பி, திருச்சி வேலுச்சாமி,உள்ளிட்ட அதிரடிகள் கலந்து கொண்ட விழாவில் மனோபாலா போன்ற தீக்கொளுத்திகளும் கலந்து கொண்டார்கள்.
படைப்பாளன் கதையே சினிமாவில் நடக்கிற திருட்டுக் கதைகளைப் பற்றியதுதான்!
சில உண்மை நிகழ்ச்சிகளும் இந்த படத்தில் சொல்லி இருப்பதாக இயக்குநர் பிரபுராஜா தெரிவித்தார். கதை,திரைக்கதை,வசனம் இயக்கம் இவர்தான்.!
படைப்பாளன் என்கிற தலைப்பே தன்னுடையது என சொல்லி ஒருவர் பத்து லட்சம் கேட்டு பின்னர் படிப்படியாக இறங்கி வந்து முப்பது ஆயிரம் கேட்பதாக அவர் சொன்னதைக் கேட்டு எப்படிப்பட்ட தில்லாலங்கடி ஆட்கள் இந்த கோலிவுட்டில் நடமாடுகிறார்கள் என்பது தெரிந்தது.
இதை விட அதிர்ச்சி மனோபாலா தெரிவித்த தகவல்தான்.!
“இந்த தீபாவளிக்கு வர்ற படங்களில் பாதிப் பேராவது என்னோட கதைன்னு வந்து நிக்கப் போறாய்ங்க. இதுக்காக ஒரு கும்பலே அலையிது!” என்றார்.
விவரம் தெரிஞ்ச ஆளு ,தவறான தகவலையா சொல்லப் போறாரு.!