கதை,இயக்கம்:ஆர்.புவன், இசை :பிரேம்ஜி அமரன் ,ஒளிப் பதிவு : கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ,தயாரிப்பு: எஸ்.3 பிக்சர்ஸ்,
யோகிபாபு,யாஷிகா ஆனந்த்,ஐஸ்வரியா ,சுதாகர்,ஜான் விஜய்
*************
ரசாயன ஆலையின் கழிவுகள் கலக்கும் குட்டை. அதில் யாரோ ஒருவன் செத்த கோழிகளை கொண்டு வந்து கொட்டுகிறான்.அதை மற்றொருவன் எடுத்து கழுவிவிட்டு கோழிக்கடையில் விற்கிறான்.அது ஒரு ஆடம்பர ரிசார்ட்டுக்குப் போகிறது. நச்சுக் கலந்த அந்த கோழிகள் உணவாகின்றன.
இதுவரை ஒரு கால் மணி நேரம் கதை பீதியைக் கிளப்பி நம்மை கடக்கிறது. நமக்கு நம்பிக்கை பிறக்கிறது.
ஆனால்?
அதன் பிறகுதான் ஏன்டா வந்து சிக்கினோம் என்கிற அவஸ்தை ஆரம்பம்.
தொலைக்காட்சிகளில் வருகிற “காமடி ராஜா’க்களின் கதகளி.
ஜாம்பிகளின் ரத்த காயங்களை முன்னதாகவே நம்மிடம் போட்டுப் பார்த்து விடுகிறார்கள்.
எப்படா யோகிபாபு வருவார், யாஷிகா ஆனந்த் எப்ப வரப்போறாங்க ,காயங்களுக்கு மருந்து போடுவாங்க என்கிற எதிர்பார்ப்பு.
கெட்டுப்போன கோழிகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கிருமி மனிதர்களை ரத்தம் குடிக்கும் ஜாம்பிகளாக மாற்றி விடும் என்பதை யாஷிகா வழியாக சொல்லி விட்டு அதை அவர்கள் மீதே திருப்பி விடுகிறார் இயக்குநர். அந்த ஜாம்பிகளிடம் மாட்டியவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
யோகிபாபுவை நம்பி எடுத்திருக்கிற படம் என்பது நன்றாகவே புரிகிறது.
இசை காட்டேரி பிரேம்ஜி அமரன்.
இசை வாத்தியங்களின் ஓசை காதுகளில் நிரம்பி வழிகிறது.
சினிமா முரசத்தின் மார்க் : 1 / 5