நீங்கள் யாரை நினைத்து இந்த செய்தியைப் படிப்பீர்கள் என்பது தெரியும்.
அதனால்தான் தலைப்பிலேயே மனைவியுடன் என்பதை சேர்த்திருக்கிறோம் .அதனால் மம்பட்டியான் கோபம் கொள்ள மாட்டார் என்கிற நம்பிக்கை.
நமது பக்கத்து மாநிலத்து கேரள நடிகர் பிரசாந்த் .இவரது மனைவி ஷோனா.பெங்காலி நடிகை.
மலையாளத்தில் பிரசாந்த் ஒரு படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் தாமஸ் பணிக்கர் என்பவரிடம் அளந்து விட்டிருக்கிறார்.
தன்னுடைய மனைவியின் தந்தை மும்பையில் பெரிய கம்பெனி வைத்திருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் உங்களை படத்தின் இயக்குனராக்கிவிடுவார்” என பிரசாந்த் சொல்லியிருக்கிறார்.
அதை நம்பிய அந்த தாமஸ் ஒரு கோடியே 2௦ லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.
அப்புறம் என்ன?
ஏமாந்திட்டோம் என்பது பிறகுதான் தெரிந்திருக்கிறது.-
கேரளா போலீசில் புகார் செய்திருக்கிறார்.
தலை மறைவாகிப் போன பிரசாந்த்–ஷோனாவை தனிப் போலீஸ் படை மும்பையில் தங்கி மூணு நாள் வேட்டையாடி கைது செய்திருக்கிறது
தற்போது இருவரும் கேரளத்து சிறையில்!