அழுகாச்சியும் ஆறுதல் சொல்லுவதுமாக கொன்று போட்டு வந்த பிக்பாஸ் நேற்று உலகநாயகன் புண்ணியத்தில் பார்க்கிற அளவுக்கு விறு விறுப்பாக இருந்தது.
தாத்தா மோகன் வைத்யா,சாக்சிஅகர்வால்,அபிராமி ஆகிய மூவரும் இல்லாதது முக்கிய காரணம், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை எதோ ஒரு காரணத்தை சொல்லி உள்ளே கொண்டுவந்தது. பிக்பாஸ் ஜனநாயகம் ,
அவர்களால் நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது மகா சோகம்.
ஏழரைகள் கழற்றி விடப்பட்டது ஆறுதல்.!
தொடக்கத்தில் பஜாரி என சொல்லப்பட்ட வனிதாவின் போலித்தனம் தொடர்வதுதான் சகிக்க முடியவில்லை.
அதிலும் நேற்று ஆடிய ஆட்டம் இருக்கே அவரது முகமூடியை கிழித்து எறிந்தது.
“மக்கள் தீர்ப்பே தப்பா இருக்கே ,எங்கள் எல்லோரையும் வெளியேத்திருங்க “என்று சேரன் வெளிஏற்றப்பட்டதை ( ? ) கண்டித்து கத்தினார் வனிதா.
மக்கள் தீர்ப்பா இப்படி இருக்கு என்று வாக்காளர்களையே சந்தேகப்பட்ட வனிதா சற்று நேரம் கழித்து “மக்கள் அனுமதித்தால் இங்கே இருக்கேன்”என்று பல்டி அடித்தது பரிதாபம் !
இந்த போலிக்குத்தான் கழுதைப் புலி பட்டத்துடன் பச்சோந்தி பட்டத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.
இந்த வாரம் சேரனை ரகசிய அறைக்கு அனுப்பி விட்டார் பிக்பாஸ் .
இந்த வாரம் உலகநாயகனின் குத்தல் வசனம் வரி ஏய்க்கும் வள்ளல்களுக்கு!