கொடிதிலும் கொடிது புற்று நோய் வந்து சாவது.
ஏழை சிகிச்சைக்கு பணமின்றி சாகிறான். அரசு மருத்துவ மனைகள் அவனது உயிர் பற்றி கவலைப்படுவதில்லை.
பணக்காரன் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்புகிறான்.
ஆகா ஓகோ என வாழ்ந்த பணம் படைத்தவர்களையும் நடிகர்களையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை.
பாலிவுட்டில் பிரபல கபூர் குடும்பத்தை சேர்ந்தவர் ரிஷி கபூர்.
ராஜ் கபூரின் மகன் .இவரது முதல் படமான பாபி ( ஹீரோ.) பெரிய ஹிட் அடித்தது. படத்தின் பாடல்கள் இன்று வரை ரசித்துக் கேட்கப் படுகின்றன.
இவருக்கு புற்று நோய்.
அமெரிக்காவில் ஓராண்டு காலம் மருத்துவமனையில் சிகிச்சை.
இன்று முழுக் குணம் அடைந்து விட்டார். நாளை தாயகம் மும்பைக்குத்ய்ஹ திரும்புகிறார்.
வரவேற்போம். வாழ்த்துவோமாக.!