- “கல்யாண ஊர்வலம் வரும்,உல்லாசமே தரும்,
- மகிழ்ந்து நான் ஆடிடுவேன்..ஓ..ஓ
- மாப்பிள்ளை நுதலின் திலகம் போல
- மணமகள் எழில் செந்தூளே..”
அற்புதமான பாடல்,
உள்ளத்தை உருக்கும் இசை.
அந்த காலத்தில் திரும்பத் திரும்ப கேட்டு ரசித்த பாடல். அத்தனை பாடல்களுமே .தேன்.!
ராஜ்கபூர்-நர்கீஸ் நடித்த ‘ஆ’ என்கிற இந்திப்படத்தின் தமிழ் டப்பிங் படமான ‘அவன் ‘படத்துக்கு ஜிக்கி பாடியிருந்தார்.
இந்தப்பாடல் ஏன் இப்போது ?
பெரிதாக ஒன்றுமில்லை. நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியின் கல்யாண ஆசையின் விளைவுதான் அந்தப் பாடல்.!
“அம்மாவிடம் கல்யாணம் பற்றி பேசியது உண்டா ஜான்வி?”
“உண்டு! எனக்கான மாப்ளையை அம்மாதான் செலக்ட் பண்ணுவதாக சொன்னாங்க. ஏன்னா நான் காதலில் ஈசியா விழுந்திடுவேன்னு அவங்க நம்பினாங்க. நான் யாரையும் சுலபமாக நம்பிடுவேன்.
என்னோட கல்யாணம் திருப்பதியில நடக்கணும் .காஞ்சிபுரம் சரிகை பட்டுப்புடவை கட்டிக்கணும். சவுத் இந்தியன் உணவுதான் விருந்து. இட்லி சாம்பார்,தயிர் சாதம் பாயாசம் எனக்கு ரொம்பப்பிடிக்கும்!” என்கிறார்.