பிரேசில் நதியில் இரண்டு நண்பர்கள் ஒரு படகில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நதியில் படபடவென ஓசையுடன் தண்ணிரில் அலைகள் எழும்பின.
லேசாக படகு ஆடியது.
இருபது அடி தூரத்தில் ஒரு அனகோண்டாவை முதலை விழுங்கத் தொடங்கி இருந்தது.
முதலையின் நீளம் ஆறு அடி. அனகோண்டாவின் நீளம் இருபத்தி எட்டு அடி.
ஒன்றுக்கொன்று சளைத்ததாகத் தெரியவில்லை. முதலையின் உடலை அனகோண்டா வலிமையுடன் சுற்றி இருந்தது.இதனால் முதலையின் இரு காலும் உடைந்து விட்டது. இருந்தாலும் முதலையின் வாயில் இருந்து அனகோண்டாவினால் மீள முடியவில்லை. முடிவில் அனகோண்டா இரையாகிப் போனது முதலையின் பசிக்கு!