தேசப்புலவன், தேசியக் கவிஞன், புரட்சியின் புதுமைப் புலவன் வேந்தன் பாரதியின் நினைவு நாள்!
- “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
- போகவோ?நாங்கள் சாகவோ?
- அழுகொண்டிருப்போமோ?ஆண் பிள்ளைகள் நாங்கள்
- அல்லவோ?உயிர் வெல்லமோ?
- நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
- நாய்களோ பன்றிச்சேய்களோ ,
- நீங்கள் மட்டும் மனிதர்களோ இது
- நீதமோ? பிடிவாதமோ?”
அரசாண்ட ஆங்கிலேயர்களை செருப்பாலடிப்பது போல கேட்டான் முண்டாசுக்கவி !
ஐயா …இன்று நினது நினவு நாள்.
நீயில்லையே என்கிற ஏக்கம் கோபம் எல்லாம் எங்களுக்கு.
ஆம் ஐயா ..இன்று அச்சம் வந்திருக்கிறது. மீண்டும் அடிமையாகிவிடுவோமோ என்கிற பேரச்சம்! பெரும்பயம்.என்ன செய்வது?
கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தில் கத்தி !நாங்கள் மரங்களாகி விட்டோம்.
இனி செய்திக்கு வருகிறேன்!
ராஜூ முருகன் என்கிற படைப்பாளி ஜிப்ஸி என்கிற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்திருப்பது உங்களுக்குத் தெரியும். கதையும் வசனமும் அவரே! தேசிய விருது பெற்றவரும் கூட!
ஜீவா முக்கிய வேடத்தில்.!
இந்த படத்துக்கு மாநில தணிக்கைக்குழு சான்றிதழ் தர மறுத்து விட்டது. மறு தணிக்கையும் கையை விரித்து விட மத்திய தணிக்கைக் குழுவுக்கு சென்றார்கள்.
அவர்களோ, ஏராளமான காட்சிகளை காவு கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்கள்.பல இடங்களில் வசனங்களை ஊமையாக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.
பல கேரக்டர்களின் பெயர்களையும் மாற்றியாகவேண்டுமாம்