“ஆம் நான் காதலிக்கிறேன்.! என்னுடைய இளவரசனை காண்பதற்காக எத்தனை தவம் இருந்தேனோ?” என ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் டாப்சி.
சுருட்டை முடி அழகியின் காதலன் யார்?
“அதை மட்டும் சொல்ல மாட்டேன். அவர் சினிமா இண்டஸ்ட்ரி ஆள் இல்லை. கிரிக்கெட் ஆடுகிறவரும் இல்லை. இங்க பக்கத்திலேயே இல்லை! எங்களது கல்யாணம் பற்றி எனக்கு எவ்வளவோ கனவுகள்.
எனக்கு குழந்தைகள் மீது ஆசை! எப்போது குழந்தை பெற வேண்டும் என்கிற ஆசை வருகிறதோ அப்போது நான் கல்யாணம் செய்து கொண்டு முறைப்படி பெற்றுக் கொள்வேன் ” என்கிறார் டாப்சி.