தலைவர்கள் மீது தொண்டர்கள் எந்த அளவுக்கு பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஜெ.சமாதியில் நடந்த ஒரு கல்யாணம் சிறந்த சான்றாக இருக்கிறது.
சமாதியில் நல்ல காரியங்கள் அதாவது சுபகாரியங்களை ,மங்களகரமான நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்பது பொதுவான கருத்து.எந்த சமுதாயத்தினரும் கோவில்கள்,கல்யாண மண்டபங்களில்தான் மண விழாக்களை நடத்துவார்கள்.
அதை உடைத்து அதிமுக பிரமுகரின் மகன் சதீஷ் -தீபிகா திருமணம் ஜெ சமாதியில் நாதஸ்வர மேளம் முழங்க அய்யர் மந்திரம் ஓத தாலி கட்டி கல்யாணம் நடந்து இருக்கிறது.
அதிமுக பிரமுகர்கள் தமிழ்மகன் உசேன்,கோகுல இந்திரா ஆகியோர் தலைமையில் நடந்து இருக்கிறது.