திரைப்பட விழாக்கள் என்றால் தவறாமல் ‘உள்ளேன் ஐயா ‘என ஆஜர் ஆகக்கூடியவர்கள் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ்,இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார்.
படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர்,இசை அமைப்பாளர் மற்றும் பலருக்கு இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் சால்வைகள் அணிவிக்க உதயகுமார் தவறுவதில்லை.இதற்கு முன்னர் இயக்குனர் சங்கத்தினர் இப்படி கவுரவித்தது இல்லை. உதயகுமாரும் சில செய்திகளை சொல்லிவிட்டுப் போவார்.
இன்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராசுவை தயாரிப்பாளர்கள் சங்க குழுவினர் சந்தித்து ஆன்லைன் டிக்கட் விற்பனை பற்றி பேசியதாகவும் விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரலாம் எனவும் தகவல் சொன்னார்.
ஆன்லைன் டிக்கெட் விற்பனை வந்தால் மக்களுக்கு நல்லது .1௦௦௦ ரூபாய்க்கு ஒரு டிக்கெட் விற்கிற நிலைமை மாறும் என்பதாக சொன்னார்.சில பெரிய நடிகர்களின் சம்பளம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதாக சொன்னார்.
ஆனால் இது உண்மையில் சாத்தியமா?
இண்டஸ்ட்ரியில் உள்ள சிலர் சாத்தியமே இல்லை என்பதாக சொல்கிறார்கள். தியேட்டர் அதிபர்களும் எப்படி முடியும் என கேட்கிறார்கள்.
ஆனால் அதிமுக சார்பாளர்கள் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்கள்.