முருகா என்று சொன்னால் பஞ்சாமிர்தமாவது கிடைக்கும்.
மிருகா என்று சொன்னால் என்ன கிடைக்கும்?
“அதான்யா கதை ” என்கிறார் தயாரிப்பாளர் வினோத் ஜெயின்.
“அப்படி என்னங்க கதை?”.
” ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான்”
“ஓ. அப்படியா ,திரும்பிப்பார் கதை கூட அப்படித்தான்! சிவாஜி கணேசன் வில்லனா நடிச்ச படம்!”
“இது அப்படி இல்லிங்க.. குறுக்கே விழுகாம கேளுங்க சார்! அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்ற நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’. இதான்ங்க சுருக்கம்!”
“ஆர்ட்டிஸ்ட்,டெக்னிஷியன்ஸ் யாருங்க?”
” ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, நடிச்சிருக்காங்க.எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய,அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன்,டைரக்ட் பண்ணிருக்கார். பாலாவின் உதவியாளர்.”
“அப்படியா வாழ்த்துகள். ஸ்ரீகாந்துக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்”