எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பெயரில் வரவிருந்த படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா!’
தனுஷ் நடித்திருக்கிற படம். கவுதம் வாசுதேவமேனன் இயக்கம் .
படப்பிடிப்பு முடிந்து விட்டது. படமும் ரெடி. தேதிகளும் அறிவித்தார்கள்.ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் வெளியிட முடியவில்லை.
காரணம் கவுதம் மேனன் வாங்கிய கடன் பெருஞ்சுமையாகி கழுத்தை ஒடிக்கும் அளவுக்கு கனமாகி விட்டது என்கிறார்கள்.
இந்த நிலையில்தான் சீயான் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கினார் மேனன்.
முதல் பிரதி அடிப்படையில் அவரே தயாரிப்பதாக சொன்னார்கள். அந்தப் படமும் நிதி நெருக்கடிக்கு இலக்காகி தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பதில்லை.
தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் ஐசரி கணேஷை அணுகி படம் எடுப்பது தொடர்பாக பேசி இருக்கிறார். ஆனால் மேனனுக்கு இருக்கும் கடன் சுமையை அறிந்து கணேஷ் நழுவி விட்டார்.
கடைசியில் லைகா தான் கை கொடுக்கும் திருப்பதி ஏழுமலையான் என நம்பி லனடனுக்குப் பயணமான மேனனுக்கு பெருமாள் அருள் பாலிக்கவில்லை என்கிறார்கள். ஏகப்பட்ட கடன் சுமையினால் அவர் மீள்வது கடினம் என்கிறார்கள்.
எனை நோக்கிப் பாயும் தோட்டா தீபாவளிக்காவது வருமா?
கடனை அடைத்து விட்டாலும் தியேட்டர் கிடைக்காது என்கிற நிலை. பெரிய படங்கள் இப்பவே தியேட்டர்களை பிடித்துக் கொண்டு விட்டன.