ஆசை ஒன்றுதான் அணியும் வகையில்தான் அவரவர் வித்தியாசப்படுகிறார்கள்.
கலாசாரம் வேறாக இருக்கலாம். குழந்தை பெறும் வித்தை ஒன்றுதானே.!
அது மனித இயல்பு.
படித்தவனும் சரி படிக்காத முட்டாளும் சரி காமத்தில் ஒன்றுதானே. அவன் அதை அணுகும் முறையில் எத்தனையோ வகைகள் இருக்கலாம் ஆனால் பலன் ஒன்றுதானே.!
பழங்குடி மக்கள் எப்படியெல்லாம் தங்களை அழகு படுத்திக் கொள்கிறார்களோ அதைப்போல பணக்காரர்களும் தங்களை அழகு படுத்திக் கொள்கிறார்கள். இங்கிருக்கிற படங்களைப் பாருங்கள் புரியும்.
பழங்குடி மக்கள் அதை சுமையாக கருதுவதில்லை. பணக்காரர்களுக்கு அது சுமைதான். எப்போதும் உடம்பு நிறைய நகைகளை அணிந்து கொண்டு அலைய முடியாது. ஆனால் பழங்குடி மக்களால் அலைய முடிகிறது.
பழங்குடி மக்கள் அரை நிர்வாணத்துடன் அலைவதற்கும் நாகரீகப் பெண்கள் அப்படி அலைவதற்கும் என்ன வித்தியாசம்? நாம் பார்க்கும் பார்வைதானே வேறுபடுகிறது.ஒருவளை காட்டு மிராண்டி என்கிறோம் .மற்றவளை நாரிமணி என்கிறோம்.இங்கே கருத்துக்குருடர்கள் நாம் தானே!