எப்பேர்ப்பட்ட பெரிய படமாக இருந்தாலும் சரி ,சூப்பர் ஸ்டார்களே நடிச்சிருந்தாலும் சரி, படத்தின் புரமோஷன்களுக்கு நயன்தாரா வரவே மாட்டார்.படத்தை ஒப்புக் கொள்ளும்போதே அப்படியொரு கண்டிஷனைப் போட்டு விடுவார்.
ஆனால் தளபதி விஜய்யின் பிகில் பட புரமோஷனுக்கு வருகிறார் என்கிறார்கள்.
பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதற்குத் தனியாக பெருந்தொகை கொடுத்திருக்கிறதாம். இதனால் சென்னைக்கு வெளியில் வருகிற 19 ஆம் தேதி நடக்கிற நிகழ்ச்சியில் தளபதி விஜய்யுடன் நயன்தாராவும் கலந்து கொள்கிறார் என்பதாக நயன்தாராவுக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் சொல்கிறது.