இயக்குநர் சீனு ராமசாமிக்கு எவருக்கும் கிட்டாத பெருமை,புகழ்,இன்னும் சொல்லப்போனால் சாதனை எல்லாமே கிடைத்திருக்கிறது.
மெல்லிசை மன்னருடன் இசை ஞானி இணைந்து மெல்ல திறந்தது கதவுக்கு இசை அமைத்திருந்தார்.
ஆனால் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இசைஞானி இணைந்ததில்லை.
விருதுகளை குவிக்கும் சீனு ராமசாமியின் மாமனிதன் படத்துக்கு அப்பாவும் மகனும் இணைந்திருக்கிறார்கள். இசைஞானி இமயம் என்றால் அதில் உற்பத்தியாகும் கங்கோத்ரி யுவன் சங்கர் ராஜா எனலாம்.
மக்கள் செல்வன் விஜயசேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் மாமனிதன் படத்தின் வேலைகள் முடிந்து ரீ ரிக்கார்டிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் பாடல்களை பா.விஜய் எழுதியிருக்கிறார்.