ராணி சம்யுக்தையை குதிரையில் வந்து பிருத்விராஜ் தூக்கிச்சென்றதாக சொல்வார்கள்.
அந்த கதை மறுபடியம் நம்ம ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் போலிருக்கிறது.
முகவை மாவட்டம் கமுதியில் கலெக்டர் வீர ராகவ ராவ் மக்கள் குறை கேட்டறிந்தார். அப்போதுதான் அந்த வீரக் கிழவர் மலைச்சாமி என்பவர் ஒரு மனுவைக் கொடுத்தார். அவர் கமுதி வீரக்குளத்தை சேர்ந்தவர்.
“ஐயா நான் விளையாட்டில நாட்டம் உள்ள ஆளு. வயசு 75.எனக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மீது தீராக் காதல். எனக்கு அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வையுங்க. இல்லேன்னா எங்கிருந்தாலும் தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிக் கொள்வேன்”என்று மனுவில் கூறி இருக்கிறார்.
“பழுத்த பழம் தித்திக்குமடி ,அந்த பாழுங் காயல்லாம் கசக்குமடி!”என்று புரட்சி தலைவர் படத்தில் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது.
இப்படி இருந்தா எப்படி பாஜக தமிழ்நாட்டில ஜெயிக்கும்னே?