சினிமாவைப் போல டி.வி.சீரியல்களிலும் ஆபாசம் மெல்ல ,மெல்ல தலை நீட்டிக் கொண்டிருக்கிறது.
வெப் சீரிஸ்களில் மட்டும் கெட்ட வார்த்தைகள் பஞ்சாமிர்தமாக வழங்கப்படுகிற போது நாமும் லாலி பாப் கொடுத்துப் பார்க்கலாமே என்கிற ஆசை வருவது இயல்புதான். டி.வி.நடத்துகிறவர்களுக்கும் வியூவர்ஸ் வெப் சீரிஸ் பக்கம் போகிறார்களே என்கிற கவலை வரலாம்.
அதன் எதிரொலியோ என்னவோ ?
திருமுருகன் என்பவர் இயக்கி வருகிற கல்யாண வீடு சீரியலில் மே மாதம் 14,15 ஆகிய நாட்களில் ஒளிபரப்பாகிய கல்யாண வீடு சீரியலில் கூட்டு பலாத்காரம் , மற்றும் வசனங்கள் ஆபாசமாக இருந்தன.குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்து பார்க்கிற சீரியல்களில் இப்படி இருக்கலாமா என்கிற புகார்களை பி.சி.சி.சி அமைப்புக்கு பொது மக்கள் தட்டி விட்டிருக்கிறார்கள்.
இதை விசாரித்த அந்த குழு சன் டி.வி.க்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.மேலும் அந்த காட்சிகளை நீக்கும்படி உத்திரவு போட்டிருக்கிறது.
கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பாகிற போது 30 வினாடிகள் மன்னிப்பு கேட்கும் காட்சி ஒளிபரப்பாக வேண்டும் என உத்திரவிட்டிருக்கிறது.
திருமுருகனின் இன்னொரு முகம் தெரிந்திருக்கிறது.