இப்பத்தான்யா மீ டூ இல்லாம சுவாசிக்க சுத்தமான காத்து வருதுன்னு பார்த்தால் நடிகை ஜரீன் கான் அசுத்த காற்றை மறுபடியும் விட்டிருக்கிறார்.
அவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் டைரக்டர் “நாளைக்கு கிஸ்ஸிங் சீன் எடுக்கணும். வா இப்ப ரிகர்சல் பார்த்திடுவோம்”என கூப்பிட்டாராம் .
“யோவ். அந்த டகால்டி வேலையெல்லாம் என் கிட்ட வேணாம் .அதெல்லாம் முடியாது” எனகடுமையாக சொல்லி மறுத்து விட்டாராம் ஜரீன் கான்.
“நைசா இப்படி ரிகர்சல் பார்க்கிறதா சொல்லி காரியத்தை முடிக்க பார்ப்பாய்ங்கன்னு எனக்குத் தெரியாதா “என்று கேட்கிறார்.
சரி அந்த மாபாவி டைரக்டர் யார்னா வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார் ஜரீன்