- எழுத்து இயக்கம் அருண் கார்த்திக், ஒளிப்பதிவு: தளபதி ரத்னம், சுந்தர் ராம் கிருஷ்ணன், இசை : திவாகர தியாகராஜன்,
- துருவா,இந்துஜா ,சிவாஷா ரா,ஆதித்ய ஷிவ்பின்க் ,ஸ்ரீனி,நாகராஜன் நஞ்சுண்டன்.
*************************************
போதைப் பொருட் கடத்தல் தலைமை அதிகாரி.நேர்மையானவர். இவருக்கு மனைவியே ஏழரை.தொங்கத் தொங்க நகைகள் ஆடம்பரம் என வாழ விரும்புகிற தர்ம பத்தினி.பிள்ளை மைக்கேல் அம்மாவின் கைத்தடி. அப்பனை போட்டு விட்டு போதைப் பொருள் கேங்கிற்கு தலைமை ஆகிறான்.இவனை துருவா ஐபிஎஸ் எப்படி போட்டுத்தள்ளப் பார்க்கிறார் என்பது கதைச் சுருக்கம். இவர் ஐபிஎஸ் என்பதை அவரே கடேசியில் சொல்லும்போதுதான் நமக்கே தெரிகிறது.
காமடியுடன் கலந்து கட்டி அடிக்கணும் என்பது இயக்குநர் அருண் கார்த்திக்கின் ஆசை.அடிப்பதற்கு துருவாவும் காமடிக்கு சிவாஷாவும் !
காமடியன் பின்னர் சில காட்சிகளில் போலீஸ் அதிகாரியாகவும் வருவார்.திடீர் திணிப்பு.! உச்சரிப்பில் செட்டிநாடு தொனி! அநியாயக் காமடி. நம் கழுத்து சில இடங்களில் அறுபடுகிறது.
துருவாவுக்கு எதிர்பார்த்திருந்த கேரக்டர் போல. வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.கோர்வையாக கதை பயணிக்கவில்லை என்பதால் கேரக்டர் முரண்படுவது போல தெரிகிறது.இயக்குநர் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்துஜாவை சுத்த சைவமாக்கி இருக்கிறார்கள். கதைக்கு கிளாமர் தேவைப் படவில்லை என்பதால் இருக்குமோ?துருவாவை காதலிக்கிறார் என்பதை சொல்வதற்காக கிறித்தவ சாவு வீட்டில் அந்த கானா தேவையில்லை. அவர் காதலிப்பது மாதிரிதான் முதலில் வருகிற காட்சிகள் இருக்கின்றன.
படத்துக்கு பிளஸ் ஒளிப்பதிவு. காட்சிகளின் தன்மைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.
எடிட்டர் முகன் வேல் ரசனைப் பிரியர் போல. ரசித்தபடியே கத்திரிக்கோலை மறந்து விட்டார் .
சினிமா முரசத்தின் மார்க்: 2 / 5