- கதை,வசனம் : கே.வி.ஆனந்த் , பட்டுக்கோட்டை பிரபாகர். இயக்கம் : கே.வி,ஆனந்த் .ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, இசை : ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் : ஆண்டனி.
- சூர்யா, மோகன்லால் , ஆர்யா ,சாயேஷா,பொம்மன் இரானிசமுத்திரக்கனி,பூர்ணா ,சிராக் ஜானி ( டபிள் ஏஜன்ட்.), பிரேம்.
- தயாரிப்பு :லைகா
********************
இயற்கை விவசாயி கதிர் ( சூர்யா .) இந்தியப் பிரதமர் சந்திரகாந்த் வர்மாவுக்கு ( மோகன்லால் ) பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக இருந்து பின்னர் எஸ்.பி,ஜி. அதிகாரியாக உயர்கிறார்.
பிரதமருக்கு பிசினஸ் மேக்னெட் மகாதேவ் பெரோஷ் (பொம்மன் இரானி.) வழியாக ஆபத்து இருக்கிறது. எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் காஷ்மீரில் பிரதமர் கொல்லப்படுகிறார்.
பிரதமரின் மகன் அபிசேக் வர்மா ( ஆர்யா.) பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் பின்னர் கதை எப்படியெல்லாம் போகிறது என்பதை 166 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
கடுமையாக உழைத்திருப்பவர் சூர்யா.உதவியாக இருந்தவர்கள் சிராக் ஜானி ,மோகன்லால்,சமுத்திரக்கனி,ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு,இசை அமைப்பாளர் ,ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆண்டனி.
ஆர்யா பிரதமராக பதவி ஏற்றதும் மந்திரி குமாரி படத்தில் மகாராஜாவாக வந்த எஸ்.எஸ்.சிவசூரியனின் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் இடைவேளைக்குப் பின்னர்தான் தொடங்குகிறது. இந்தியாவின் பிசினெஸ் மேக்னட் நடத்தும் தொழிற்சாலை விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிற பிரதமர் மோகன்லாலுக்கு மகாதேவ் நடத்துகிற வெட்டுக்கிளி விவகாரம் பற்றி தெரிந்ததும் கொதிக்கிறார். கெட் அவுட் சொல்கிறார். அடுத்து அவர் எடுத்த நடவடிக்கை என்ன?
பிரேம்,ஜானி இருவரது தொடர்பு தெரிந்த மறு நொடியே ஸ்நாப் ஷாட் எஸ்.பி.ஜி. வித்தகர் சமுத்திரக்கனி பிரேமை சுட்டு வீழ்த்தி இருக்க வேணாமா? எஸ்.பி.ஜி .யின் மரபு அதுதானே? இயக்குனர் கே.வி.ஆனந்த் சார் தான் சொல்ல வேண்டும்! அடுத்த முறை பட்டுக்கோட்டை பிரபாகர் இல்லாமல் வேறு ஒருவரின் உதவியை நாடிப் பாருங்களேன்.!துணை இயக்குனர்களில் அற்புதமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள் சார்!
சூர்யா -ஜானி இருவருடைய கடும் உழைப்பு படத்தின் முற்பாதியை எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. மிரட்டலான ஒளிப்பதிவு ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கிறது. வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கிற காட்சிகள் நம்மை பதற வைக்கின்றன. எம் எஸ்.பிரபு.வுக்கு கணையாழி போடலாம். சார். பிரதமர் அலுவலகத்துக்குள் இருக்கிற உள்குத்து விவகாரங்களை அலசி ஆராயாமல் மேலோட்டமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கதைக்கு தேவையான அளவு மட்டும் எடுத்திருக்கிறார்கள்.
இது சூர்யாவின் படம். நீளத்தை வெகுவாக குறைத்திருந்தால் பெரிய மாஸ் படமாக இருந்திருக்கும்.
சினிமா முரசத்தின் மார்க் : 2. 5 / 5