கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது,
உலகத்துல மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? வாழவேண்டிய பிள்ளைகளோட மரணச்செய்தியை பெத்தவங்க கிட்ட சொல்றதுதான்.
சுபஸ்ரீயோட மரணச் செய்தியும் அப்படியானது தான். தன் பெண்ணோட இரத்தம் சாலையில் சிந்தி கிடைக்கிறதை பார்க்கிறபோது பெத்தவங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருடைய மனதிலும் திகிலும்,மரணவலியும் வரும். பெண்களை பெத்தவங்க என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இந்த மாதிரி பல ‘ரகு’ க்கள்,’சுபஸ்ரீ’க்களும் அரசாங்கத்தோட அலட்சியத்தால கொல்லப்பட்டு இருக்காங்க. ஏங்க… கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா? எங்க பேனர் வைக்கணும், வைக்கக் கூடாதுங்றது கூடவா உங்களுக்கு தெரியாது?
இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள்பறிக்கப்பட போகின்றதோ? எதிர்த்து கேள்வி கேட்டா ஏறி மிதிக்கிறதும், தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன்னு மிரட்டுவதும் தானே உங்களுக்கு தெரிந்த அரசியல்.
இந்த மாதிரி ஆளுங்க மேல எனக்கு மயிரிழை கூட அளவு கூட மரியாதையும், பயமும் கிடையாது. ஒரு வேளை உங்களுக்கு பயமாக இருந்தால், என் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக அந்த தவறுகளை தட்டிக் கேட்டு . தீர்வும் தேடி தர முற்படும். எங்களை ஆள்கிறவர்களை நாங்க தான் தேர்வு செய்வோம். ஆனா நாங்க காலம் பூராவும் அடிமையாகத்தான் இருப்போம்ணு சொன்னா அதைவிட பைத்தியக்காரத் தனம் வேறு எதுவும் கிடையாது.
உங்களை சாதாரண மக்கள், சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே அடிமையாகவே இன்றும் வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரணமான தலைவர்களை உருவாகிறார்கள் என்பதை திண்ணமாக நம்புகிறேன்.
வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம், புதிய தலைமையை உருவாக்குவோம். நாளைநமதே! இவ்வாறு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். வீடியோ இணைப்பு கீழே !
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
மாற வேண்டும். pic.twitter.com/RQgaiORiHc— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2019