ஒரு செய்தி கேள்விப் பட்டோம் !
அது அதிகாரப் பூர்வமானது இல்லை என்றாலும் சிம்பு வட்டத்தில் இருக்கிற ஒரு ‘நல்லவர்’ சொன்ன சேதி. அதாவது தகவல்.!
“அண்ணன் ஃபாரின்ல இருந்து திரும்பியதும் ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசப்போறார்.”
“எதுக்கு தம்பி. கல்யாண சேதிய சொல்லிட்டு விருந்து போடப்போறதா சொல்லப் போறாரா? கல்யாண விருந்து போடறதா சொன்னவரு கடேசில கட்சி ஆரம்பிக்கப் போறதா சொல்லிட்டு விருந்து போட்டாரே அது மாதிரி உங்க அண்ணனும் சொல்லப்போறாரா ?”
“இல்லேண்ணே ! ரசிகர் மன்றத்தை இனிமே எப்படி செயல்படுத்துறது, அதுக்கு எப்படி புது ரத்தம் பாச்சுறது ..இப்படி நெறைய ஐடியாக்களோடு வர்றாரு.”
“அப்படியா கட்சி கிட்சி ஆரம்பிப்பாரோ ..சொல்ல முடியாது செஞ்சாலும் செய்வாரு!”
“இந்த மாதிரி ஏடாசியா பேசினா பேச மாட்டேண்ணே !”
“கோச்சுக்காதடா தம்பி! புதுப்படத்துக்கு அண்ணே எப்ப பூசைப் போடப் போறாரு.அத முதல்ல கேட்டு சொல்லு!”