“நீங்கள் என்ன நெருப்புக் கோழியா ?” என மத்தியத் திரைப்படக் குழுவை நீதி மன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
சில்ட்ரன்ஸ் பிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா என்கிற அமைப்பு மும்பை ஹை கோர்ட்டில் தொடர்ந்த மனு மீது ஒரு பெஞ்ச் விசாரணை செய்தது.
மனுவை விசாரித்த பெஞ்ச் கடுமையான கண்டனங்களைமத்தியத் தணிக்கைக் குழு மீது பதிவு செய்திருக்கிறது.
“உங்களுக்கு சான்றிதழ் கொடுக்கிற வேலைதான்! எதை பார்க்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்கிற அறிவார்ந்த வேலை ,முடிவு செய்கிற உரிமை கொடுக்கப்படவில்லை”
கடந்த 16 வருடங்களில் 793 படங்கள் தடை செய்யப்படுள்ளன. இதில் 586 இந்தியப்படங்கள். 207 வெளிநாட்டுப்படங்கள். தமிழில் 96, தெலுங்கில் 53 , கன்னடத்தில் 39, மலையாளத்தில் 23 என தடை செய்யப்பட்ட படங்களில் அடங்கும்.
தற்போது ராஜூ முருகனும் தனது ஜிப்ஸி படத்துக்காக தணிக்கைக் குழுவுடன் போராடி வருகிறார்.