அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன்.
கோடிக்கணக்கான வாசிப்பாளர்களின் நெஞ்சங்களை விட்டு அகலாத வரலாறு தழுவிய கற்பனை காவியம்.
இந்தியாவின் பெருமை மிகு இயக்குநர்களில் ஒருவராகிய மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டில் தொடங்க இருக்கிற நெடும் படம்.
இரண்டு பாகங்களாக வரவிருக்கிற இந்தப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் வளரவிருக்கிறது. சோழ,பாண்டியர்களின் வரலாற்று எச்சங்கள் இன்னும் சில இங்குதான் இருக்கின்றன. இங்குதான் அழியாமல் தமிழர்களின் அடையாளங்கள் இருக்கின்றன.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கார்த்தி,சீயான் விக்ரம், ஜெயம்ரவி ,பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். அந்தக் காலத்திற்கேற்ப அனைவரும் நீண்ட முடி,தாடியுடன் இருக்கவேண்டும் என்று இவர்களுக்கு இயக்குநர் உத்திரவு போட்டிருக்கிறார்.
ஐஸ்வர்யாராய்,கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா லட்சுமி,அமலாபால் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ரகுமான் இசையில் ரவிவர்மன் ஒளிப்பதிவு.