சன் நிறுவனம் வெளியிடும் தளபதி விஜய்யின் பிகில் பட ஆடியோ விழாவில் மோசமான நிகழ்வுகள்.
தளபதி ரசிகர்கள் மீது தடியடி நடந்திருக்கிறது. முறையான அனுமதி சீட்டு வைத்திருந்தும் அவர்களை விழா அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை.
அவர்கள் மட்டுமல்ல கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அனுமதி இல்லை. கடுப்புடன் கிளம்பி விட்டார்கள். பொதுவாக சன் நிறுவனம் நடத்துகிற இது போன்ற சினிமா விழாக்களுக்கு பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லை. அது பிகில் விழாவிலும் நடந்தது ஆச்சரியமில்லை.ஏனென்றால் அவர்களிடம் எல்லா மீடியாவும் இருக்கிறதாம்.
தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் சகோதரர்கள் விழா நடத்தும் பொறுப்பினை தனியாரிடம் ஒப்படைத்ததின் விளைவு எல்லாமே குழப்பத்தில் முடிந்திருக்கிறது. திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.2 மணி நேரம் தாமதமாகத்தான் நடந்தது.குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்பது மகா சோகம். “எனது ரசிகர்களை அடிக்காதீர்கள் “என்று ஆளும்கட்சி தரப்பினரை பார்த்து சொன்ன தளபதி விஜய்க்கு தனது பட விழாவிலேயே ரசிகர்கள் தர்ம அடி வாங்கியது தெரியாது போய் விட்டதா?