நடிகர் சங்கத் தேர்தலின் போது தன்னை பரம விரோதியாகவே நினைத்து மோதிய ராதாரவியை ,அதெல்லாம் சும்மா காச்சுக்கும்! என்பது போல, மருது படத்தில் விசாலுடன் ராதாரவி நடிக்கிறார் என அதன் இயக்குனர் முத்தையா தரப்பில் அதிரடி அறிவிப்பு வெளியானது. தற்போது அதைவிட அதிரடியாக ,இன்று விஷால் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ராதாரவி உங்களோடு நடிக்கிறாரா ?என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “ஒரு கதைக்கு என்ன தேவைப்படுது. அந்த கேரக்டரில் யார் நடிச்சா நல்லாயிருக்கும்னு முடிவு பண்றது டைரக்டர்தான். ஒருவேளை மருது படத்தின் டைரக்டர் முத்தையா அவரை நடிக்க வைக்கணும்னு விரும்பினா நான் தடுக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தல் வேறு. படம் வேறு. ராதாரவி மட்டுமில்ல. சரத்குமாரோடு கூட நான் சேர்ந்து நடிக்க தயாராகவே இருக்கேன்” என்றார் விஷால்.