வரலாற்று நாவலில் சாதனை படைத்தது ‘பொன்னியின் செல்வன்.’
அமரர் கல்கியின் அமரத்துவ படைப்பு..தமிழ்த் திரை உலகினரை கவர்ந்து இழுத்த காந்த காவியம்.
இயக்குனர் மணி ரத்னம் இயக்கவிருக்கும் இந்த அரிய படைப்பு இரு பாகங்களாக வெளிவருகிறது.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா பச்சனுக்கு இரண்டு கேரக்டர்கள் என்கிறார்கள். முக்கிய கதா பாத்திரம் நந்தினி.பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக!
மற்றொரு கேரக்டர் மந்தாகினி தேவியாக!அதாவது நந்தினியின் அம்மா .வாய் பேசாதவர்.
கார்த்தி,விக்ரம் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடிக்கிறது. புது வருடத்தில் தாய் லாந்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பதை முன்னமே சொல்லியிருக்கிறோம்.