தமிழீழம் என்றாலே தணிக்கைக்குழு கண்ணீரில் குவி லென்ஸ் வைத்துக் கொண்டு பார்க்கும். ஈழத் தமிழர்கள் என்றாலே அவ்வளவு காதல்.!
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம்.
ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டார்.
அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார்.
புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.