அரசியலில் புகுந்து செமத்தியாக அடிவாங்கியவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
உடன் இருந்தே குழி தோண்டி சொந்தத் தொகுதியிலேயே அவரை தோற்கடித்தனர்.
அவரது தம்பி பவன் கல்யாணுக்கும் அதே நிலைதான். சிரஞ்சீவி அரசியலுக்கு கும்பிடு போட்டு விட்டார், தம்பி போராடிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன்,ரஜினி காந்த் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி அனுபவசாலியான சிரஞ்சீவியின் கருத்து என்ன?
“அரசியல்னா பணத்தை வச்சு நடத்துறதுன்னு ஆகிப் போச்சு. எல்லாம் பணம்தான்!
நல்லது செய்யனும்னு நாம நினைச்சாலும் நம்மால முடியாது.
ஐயா நான் தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன்னா இருந்தேன். இதை விட்டுட்டு அரசியலுக்கு வந்தேன். என்னுடைய சொந்த தொகுதியிலேயே என்னை தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவு பண்ணினாங்க.என்னுடைய தம்பி பவனுக்கும் அதுதான் நடக்கிது.
கமல் ஜெயிப்பார்னு நினைச்சேன்.நடக்கல.பொறுமையுடன் அவமானம் பொருள் இழப்பு, இதையெல்லாம் எதிர்கொள்ளணும்.ஆனா என்னை மாதிரி சென்சிடிவ் டைப் அரசியலில் இருக்க முடியாது.