எங்கே போய் முட்டிக்கிறது?
100 ./. காதல் படத்தின் முன்னோட்ட விழாவுக்கு வந்திருந்த பிரபலங்களில் ‘நிலைய வித்வான்’ ஆர்.வி. உதயகுமார் ,நடிகை ரேகா ஆகிய இருவர் மட்டுமே பரபரப்பான செய்திகளை தட்டி விட்டார்கள்.
“ஆன் லைன் டிக்கெட் விற்பனை வந்தால் தியேட்டரில் அன்று எத்தனை டிக்கெட்கள் விற்றது, அதில் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு, தியேட்டர்காரர்களுக்கு எவ்வளவு,அரசுக்கு நாம வரியாக் கொடுக்கிறது எவ்வளவு என்பது சரியா தெரிஞ்சிரும் .இனிமேல் என் படத்துக்கு இவ்வளவு வசூல்னு புருடா விட முடியாது ” என்றார் உதயகுமார்.
இதில் என்ன வேடிக்கை என்னன்னா “பல தியேட்டர்காரர்களால் கம்ப்யூட்டர் மிஷின் கூட வாங்க முடியாம கஷ்டப்படுவாங்க” என்று அபிராமி ராமநாதன் கூறினாராம். அடப் பாவமே!
அப்புறம் பேச வந்த கடலோரக் கவிதை ரேகா, கண்ணீர் விடாதக் குறையாக புலம்பி விட்டார்.
“என்னை குழிக்குள் தள்ளிவிட்டு, அதை கமல் ரஜினி மற்றும் பலர் எட்டிப் பாக்கிறது மாதிரி நான் செத்துப் போயிட்டதாக நியூஸ் போடுறீங்களே மீசைக்கார மச்சான் இது நியாயமா?
யாருங்க, அந்த மீசைக்கார மச்சான். இப்படி பொய்யா நியூஸ் போட்டா 2 மில்லியன் வியூவர்ஸ்.படிக்கிறவங்களுக்கு காமன் சென்ஸ் வேணாமா?
உயிரோடு இருக்கிறவளை செத்துப் போயிட்டதா நியூஸ் போடுறாங்களேன்னு சிந்திக்க வேணாமா?எத்தனை வாட்டி கவுண்டமணி ,கே.ஆர்.விஜயாம்மா, மைக் மோகனை சாகடிச்சிருப்பீங்க? விட்ருங்க” என கலங்கிவிட்டார்.