நடிகர் விஷாலுடன் இருப்பது காதலா ,நட்பா? என்ற கேள்விக்கு தமிழக முன்னணி மாலை நாளிதழ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள நடிகை வரலட்சுமிசரத்குமார் கூறுகையில்,விசாலுடன் நான் கொண்டிருப்பது நட்பு தான், இது காதலாக மாறுமா என்பது எனக்கு தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இனால் சொல்ல முடியாது.காதலாக மாறும் போது கண்டிப்பா எல்லோருக்கும் சொல்வேன்.மேலும்,’லிவிங் டுகெதர்’ குறித்து கேள்வி எழுப்புகையில் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இது அவசியமாகிறது.எதிர்காலத்தில் இது விவாகரத்து பிரச்னைகளை தவிர்க்கவும் சாத்தியமாகிறது.என்கிறார். இந்நிலையில்,நடிகர் விஷால் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது,திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,நடிகர் ச ங்கத்தின் கட்டட வேலைகள் மும்முரமாகப் போகிறது. ஒப்பந்த ரத்து பத்திரத்தை சரத்சார் கொடுத்து விட்டார். இனி பிரச்சினை இருக்காது தடை வராது. எல்லாம் பாசிடிவ்வா போகிறது.திருமணம் பற்றி கேட்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு திருமணம் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தான் என்னுடைய முழு முதல் திட்டம். கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் என்னுடைய திருமணம் நடக்கும்.என்னுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்காது. நிச்சயம் காதல் திருமணம்தான். நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதை தக்க சமயத்தில் நானே உங்களிடம் அறிவிப்பேன்.என்கிறார்.