“அரசியலில் என்னைத் தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவழித்தனர். அரசியல் என்பது பணமாகிவிட்டது,.திரை உலகில் நம்பர் ஒன்னாக இருந்தவனை சொந்தத் தொகுதியிலேயே தோற்கடித்து விட்டனர். அதனால் கமல்,ரஜினி இருவருக்கும் அரசியல் வேணாம்” என்று ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அட்வைஸ் பண்ணியிருந்தார்.
சூடு பட்ட பூனை பாலை குடிக்க மறுத்தது போல.!
இதற்கு இதுவரை சொப்பர் ஸ்டார் ரஜினி பதில் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் உலகநாயகன் பதில் சொன்னதாக ஆந்திர பத்திரிக்கை சொல்லி இருக்கிறது.
“நான் வெற்றி பெற நினைப்பது பணத்துக்காக இல்லை. வேறு ஆதாயம் தேடவில்லை. இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே நோக்கம். தயவு செய்து இனிமேல் அறிவுரை வழங்க வேணாம்.நான் அரசியலைப் பற்றி தெரிந்திருக்கிறேன்”என்பதாக சொன்னாராம்.
இனி அகம் வழியாக அகத்துக்குள் செல்வோம்.டண்ட டய்ங்!