நவராத்திரி நாளையில் இருந்து ஆரம்பம்.
ஏழரை இன்றே ஆரம்பமாகி விட்டது.
ஹைதராபாத்தில் உள்ள பஜரங்க தள அமைப்பு நவராத்திரி விழா நடத்துகிறவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பி இருக்கிறது.
“விழாவின் போது நடைபெறுகிற ‘தாண்டியா’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர்களிடம் ஆதார் கார்டு வாங்கிப் பாருங்கள். அவர்கள் இந்துவாக இருந்தால் அனுமதியுங்கள். மற்ற மதத்தினரை அனுமதிக்காதீர்கள்.அவர்கள் நம் இந்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள ஏதுவாகிவிடும் .அதைப்போல பவுன்சர்களையும் வேறு மதத்தவரை சேர்க்க வேண்டாம்” என எழுதி இருக்கிறார்கள்.
அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறவர்களை எப்படி பிரிக்கிறார்கள் பாருங்கள். சொந்த மதத்தவன் சூன்யம் வைக்க மாட்டானா?