‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ சேரன் இயக்கியுள்ள இப்படம் வரும் 2015 ஜனவரி மாதம் 15ம் நாள் ‘சி டு ஹெச்’முறையில் சட்டப்படி உரிமம் பெற்று டி வி டியாக 50 ரூபாய் விலையில் வெளியாகும் என்றும் அதே சமயம் தமிழ்நாடு முழுவதும் 75 திரையரங்குகளில் வெளியாகும்என்றும் இயக்குனர் சேரன் அறிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
‘”தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியான அன்றே விநியோகம் செய்ய DVD பஜார் அமைப்பு மூலம் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலும், வீடுகளின் எண்ணிக்கை அடிக்கடையிலும் 154 விநியோகஸ்தர்கள் மற்றும் 5000 முகவர்கள் (DEALERS) நியமிக்கப்பட்டுவருகின்றனர்.C2H நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய கணக்கெடுப்பின்படி 64 சதவீதம் பேர் இந்த
C2H நிறுவனத்திற்கு ஆதரவும், DVDகளை வீடுகளில் வாங்குவதற்கான உறுதியும் அளித்துள்ளனர்.. எங்களது கணக்கெடுப்பினை கருத்தில் கொண்டு, ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் முன்கூட்டிய விற்பனைக்கான இலக்கினை மக்களிடம் (PRE ORDER) வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறோம்.. C2Hல் வெளியாகும் திரைப்படங்களின் DVD மேலுறை வடிவமைப்பினை இன்று மக்களிடமும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் வெளியிடுகிறோம்.. ஐயாயிரம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை, கோயம்புத்தூர், சேலம்,
விழுப்புரம், திருச்சி, மதுரை, போன்ற ஒவ்வொரு மண்டலத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முகவர்களுக்கான அடையாள அட்டை, கைப்பை, அனுமதிகடிதம் போன்றவற்றை C2H நிறுவனம் நேரடியாக வழங்க இருக்கிறது..
C2H – SET TOP BOXES
C2H நிறுவனம் திரைப்படங்களை SETTOP BOX மூலமாகவும் கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் டெல்லி போன்ற இடங்களிலும் வெளியிடுகிறது.
C2Hல் வெளியாகும் திரைப்படங்களை குறைவான, சரியான விலையில் உலகளாவிய மக்களுக்கும் சட்டப்படி, சரியான முறையில் உயர்தர வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் (1080P, 5.1) கொண்டு செல்ல ONLINE/ IPTV/OTT போன்ற தளங்களையும் நிறுவியுள்ளது…இந்த டி விடி யை யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும் என்கிறார். இப்படத்தில், சர்வா, நித்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ளனர். /