இத்தனை நாளும் ஓய்ந்து கிடந்தது மீ டூ வில்லங்கம்.
மறுபடியும் பாலிவுட்டில் தலை தூக்கி இருக்கிறது.
பாலிவுட் -பிக்பாஸ் பேமஸ் நடிகை எல்லி அவ்ரம்.கிரீக்-ஸ்விடீஷ் அழகி. ஏழாவது சீசன் பிக்பாஸில் அசத்திய அழகி.
தன்னுடைய மீ டூ அனுபவம் பற்றி சொன்னதை கேளுங்கள்.
“பாலிவுட்டில் பிரபல டைரக்டரை சந்தித்து எல்லோரிடமும் கை குலுக்குவதைப் போல அவரிடமும் கை குலுக்கினேன்.
குலுக்கிய கைக்குள் சுரண்டினார்.
எதுக்கு சுரண்டினார் என்பது எனக்கு தெரியாது. சக நடிகையிடம் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.
“”அடியே ..அதுக்கு அவரோடு படுக்க வர்றியான்னு அர்த்தம் .ஜாக்கிரதையாக இருக்கணும்டி !”என அட்வைஸ் பண்ணினார்.
இன்னொரு சம்பவம்.ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மறுநாளே தயாரிப்பாளர் என்னை படத்திலிருந்து தூக்கி விட்டார்.
படத்தின் ஹீரோவுடன் ஒருநாள் நைட் படுக்க வேண்டும் என்பதற்கு இணங்காததால் அந்த தண்டனை என்பது பின்னர் தெரிந்தது.”
அடப்பாவிகளா!