சலீம் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் Rk சுரேஷ் தயாரிக்கும் படம் ”தர்மதுரை” இப்படத் தலைப்பில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்துள்ளது குறிப்பிடதக்கது.இப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
இடம்.பொருள் ஏவல் படத்திற்க்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவு- சுகுமார், இசை- யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்- காசி விஸ்வநாதன், கலை- பத்மாமகன்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.