சென்னையிலும் ராஜமுந்திரியிலும் இந்தியன்.2 படத்தின் ஷூட்டிங் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
லைகா தயாரிப்பு. ஷங்கர் இயக்கம் .இரட்டை வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.மற்றும் நெடுமுடி வேணு,சித்தார்த்,ரகுல்பிரீத், காஜல் ,பிரியா பவானி சங்கர்,மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை நாடினார்கள். அவர் கேட்ட சம்பளத்தில் இன்னொரு படம் எடுத்து விடலாம் என்பதால் அவரை வெட்டி விட்டார்கள்.
தற்போது அனில்கபூரை கேட்டிருக்கிறார்கள்.அனேகமாக மேட்டர் படிவதாக சொல்கிறார்கள்.