Direction : Rajesh M. Selva
Production : Raaj Kamal Films International & Sri Gokulam Movies
Starring : Kamal Hassan, Prakash Raj, Trisha, Kishore, Sampath
Music : Ghibran
Cinematography : Sanu John Varghese
Editing : Shan Mohammed
Rating ; 3/5
‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்ச் நாவலை அடிப்படையாகக் கொண்டு, கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘தூங்கா வனம்’.
பணத்திற்காக எந்த வேலையையும் செய்யுக்கூடிய போலீஸ் அதிகாரியாக கமல். போதைப் பொருள் கடத்தி வருபவராக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். அவரிடம் இருந்து விலைமதிப்புள்ள ,போதைப் பொருளை கமலும், யூகிசேதுவும், கடத்துகிறார்கள். இதன் காரணமாக கமலின் பத்து வயது மகனை பிரகாஷ் ராஜ் கடத்தி விடுகிறார்.தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட போதைப் பொருளை கொடுத்து விட்டு மகனை மீட்டு செல்லும் படி பிரகாஷ் ராஜ் மிரட்ட,கமலும் போதைப் பொருளை பிரகாஷ் ராஜ் வசம் ஒப்படைக்கச் செல்கிறார். அதை மற்றொரு போலீஸ் அதிகாரியான திரிஷா பார்த்து விடுகிறார். இந்நிலையில், அவர் பதுக்கி வைத்த இடத்தில் போதைப் பொருள் காணாமல் போகிறது. இதனால் குழப்பதிற்குள்ளாகும் கமல், ஒரே ஒரு இரவில் நடக்கும் இந்த சம்பவத்தில், தன் மகனை மீட்டாரா? இல்லையா! அவன் கதி என்னவானது? அந்த போதைப் பொருள் பையை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன? என்பதே இப்படத்தின் பரபரப்பான மீதிக்கதை. ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ஆக்சன் கதையில் நடித்திருக்கிறார் கமல். வழக்கம் போலவே கமல் தன் நடிப்பை வெளிபடுத்தியிருக்கும் விதம் அற்புதம்.வழக்கமான நேர்மை போலீசாக இல்லாமல் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். திரிஷா துடிப்பு மிக்க போலீஸ் கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.பிரகாஷ் ராஜ் நடிப்பில் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார். கிஷோர் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சம்பத், ஜெகன், ஆஷா சரத் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எடிட்டிங் கச்சிதம். கமல், திரிஷா, கிஷோர் மோதும் சண்டைக்காட்சி மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார் கமலின் உதவியாளர் இயக்குனர் ராஜேஷ்.முற்பாதி படு விறுவிறுப்பு! பிற்பாதியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஜிப்ரான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சனு ஜானின் ஒளிப்பதிவு அருமை. கமல் இனிமேல் இது போன்ற படங்களில் நடிப்பதை தவிர்த்தல் நலம்.! .மொத்தத்தில் தமிழில் ஒரு ஹாலிவுட்படத்தை தருவதற்கு முயற்சித்த தூங்காவனம் படக்குழுவை பாராட்டலாம்!!