பருவம் கிளர்ந்தெழும் போது உடலும் உள்ளமும் தேடுவது இளமையான இணையை.!
ஹார்மோனின் தகிப்பு கண் வழியே தெரிவதில்லை .உடல் வழி தேடும் உணர்வு உந்தித் தள்ளும்.
அப்படித்தான் முதல் முத்தமும்.! எஸ்.கே.விக்டர் என்கிற கவிஞர் எழுதிய தொகுப்பில் நமக்குப் பிடிக்கும் வரிகள் இதுவாகவும் இருக்கலாம்.!
- எதிர்பாரா நேரத்தில் என்னை
- இழுத்தணைத்து
- இதழ் பதித்த
- முதல் முத்தம்,
- தேனாக இனிக்குமென
- நினைத்திருந்தேன்
- இப்படி தீயாக தகிக்கும் என எதிர்பாரேன்
இப்படித்தான் ஆகிப்போனது நடிகை கங்கனா ரனாவத்தின் முதல் முத்தமும்.
நடிகைகளில் மிகவும் வித்தியாசமானவர். மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடக்கூடியவர். துணிந்த கருத்துகள்.இதனால் அவர் பல நண்பர்களை இழந்திருக்கிறார்.
எந்த நடிகை செக்ஸ் பற்றியும் ,முதல் காதல் பற்றியும் தைரியமுடன் சொல்வதற்கு தயாராக இருக்கிறார்?
மறைப்பார்கள். ஆனால் கங்கனா?
“அப்ப எனக்கு 17 வயசு இருக்கும். ( சரியான பருவம்தான்.) என்னுடைய தோழி ஒருவருடன் டேட்டிங்கில் இருந்தா! எதனாலேன்னு தெரியல .முறிஞ்சி போச்சு.அந்த வாலிபன் பஞ்சாபி ,இருபத்தெட்டு வயசு இருக்கும். நல்லா இருப்பான்.ஒருத்தனுக்கு தோற்றம்தானே கவர்ச்சி!
ஆனா அவன் என்னை பாத்திட்டு ‘நீ சின்ன குழந்த மாதிரி இருக்கே’ன்னுட்டான். என்னால அவன மறக்க முடியல. ‘ஒரு சான்ஸ் கொடு! நான் வளர்ந்து காட்டுறேன்’னேன். அந்த நிகழ்ச்சிய இன்னும் மறக்க முடியல.”
கிஸ்ஸிங் அனுபவத்த பத்தி சொல்றேன். என் உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பிராக்டீஸ் பண்ணினேன்னா நம்புவீங்களா ,ஆனா அதுதான் நிஜம். யாருக்கும் தெரியாம அப்படி பிராக்டீஸ் பண்ணினேன். ஆனா நிஜ முத்தம்?
என் வாயே உறஞ்சி போன மாதிரி ஃபிரீஸ் ஆகிப்போச்சு.
‘கொஞ்சம் வாயை எடேன்’னு அந்த பையன் சொன்னபிறகுதான் என்னோட தன்னுணர்வு திரும்பிச்சி”