சபையின் மாண்பினைக் காப்பவர் என்பதால் சபாநாயகர் என்கிறார்கள்.
வானளாவும் அதிகாரம் இருக்கிறது என சொல்லிக் கொள்வார்கள். அந்த அதிகாரம் மக்களைக் காப்பதற்காக!
ஆனால் தன்னுடைய வீட்டுக்கு வாடகைக்கு குடிவந்த குடும்பத்தின் குடியைக் கெடுத்து இருக்கிறார் ஒரு சபாநாயகர்.
நேபாளத்தின் கீழ்சபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டவர் கிருஷ்ணன் பகதூர் மகரா .
இவருக்கு பல சொந்த வீடுகள். அதில் ஒன்று காத்மண்டுவில் இருக்கிறது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார், அந்த வீட்டில் ஆண் இல்லாத நேரமாக பார்த்து புகுந்து பெண்ணை கெடுத்து விட்டாராம். போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.அவரும் பதவி விலகி விட்டார்.
ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக இருந்தாலும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அவர்களை பற்றி என்ன சொல்வது?