திரைக்கதை,இயக்கம்.: சுரேந்தர் ரெட்டி, ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு, கதை : பருச்சுரி பிரதர்ஸ், கலை :ராஜீவன் ,வசனம் :விஜய் பாலாஜி,
அமிதாப் பச்சன்,சிரஞ்சீவி,விஜய் சேதுபதி , சுதீப்,தமன்னா, நயன்தாரா,ஜகபதி பாபு,லட்சுமி கோபால்சாமி, அனுஷ்கா ( கவுரவம் )
***********************
தெலுங்கு தேசத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுந்த குட்டி ராஜாக்களில் ஒருவர் உய்யலவாடா சைரா நரசிம்ம ரெட்டி.
வியாபாரம் செய்ய வந்த நாட்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்ட ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடியவர்களில் இவரும் ஒருவர்.ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிரி. இவரின் தலையை கொய்து தனியாக கட்டி தொங்கவிட்டிருந்தார்கள்.அது அழுகி கபால எலும்பு தெரிகிற வரை.
குறுநில மன்னர்களின் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தாமல் இவரை ஜனங்களின் காவலனாக காட்டியிருப்பதும்,ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதை வெகுஜன எழுச்சியாக சித்தரித்து இருப்பதும் இயக்குநரின் திரைக்கதை சாதுர்யம்.
கதையை பெரிய அளவில் நமக்கு காட்டியதில் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவுக்குத்தான் முக்கால் பகுதி பெருமை. அடுத்து ஆர்ட் டைரக்டர் ராஜீவனுக்கு.! கிராண்டியரை இவ்விருவருமே பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகுபலிக்கு நிகராக இருக்க வேண்டுமே என்கிற கவலை மொத்த யூனிட்டுக்கும் இருந்திருக்கிறது.
நவீன சினிமாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் சி.சி.,மற்றும் வி.எப்.எக்ஸ் உத்திகளை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். திரையில் அரண்மனை, போர்க்களம், கோட்டை ,ஆங்கிலேய தலைமையகம் என எல்லாமே பிரமாண்டம். அதிலும் சண்டைக் காட்சிகளை சொல்லலாம்.
முதலில் நடிப்பின் சிறப்புகளை சொல்லிவிட்டுத்தானே பின்னர் மற்றவைகளை சொல்வது வழக்கம் .ஆனால் சைராவில் டெக்னிகல் டீம்தான் பெருமைகளை அள்ளுகிறது.
அமிதாப் குருவாக வருகிறார். அலட்டல் இல்லை. மந்திர வெருட்டல்கள் இல்லை. இது மகன் தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்திருக்கிற படம். போராட்ட குணம்,காதலை பின் தள்ளிவிட்டு நாட்டுப்பற்றை முன்னிறுத்துகிற வேடம். வெகு சிறப்பு. எவருடனும் ஒப்பிட்டு இவரது நடிப்பினை கொச்சைப் படுத்துவது அநாகரீகம். இவரது பாணியே தனி.தமன்னாவிடம் மனதை பறி கொடுத்து விட்டு பின்னர் தன்னுடைய மனைவி நயன்தாராதான் என்பதை அறிந்து குற்ற உணர்ச்சியில் மருகுவது இயல்பாக இருக்கிறது.
தமன்னாவுக்கு தான் முக்கிய வேடம் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நயன்தாராவுக்கு ஸ்கோப் குறைவு. அனுஷ்கா தொடக்கத்தில் ஜான்சி ராணியாக வந்து வசனம் பேசிவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜபாண்டியாக விஜய் சேதுபதி. தமிழ்நாட்டவரை கொண்டு வரவேண்டும் என்பது அவசியம் இல்லை என்றாலும் வணிக ரீதியில் சிந்தித்திருக்கிறார்கள். வரலாற்றுப் படத்துக்கே உரிய வசனங்கள் இல்லையென்றாலும் சம கால சொற்களையும் வசனகர்த்தா பயன்படுத்தி இருக்கிறார். முற்பாதியை விட பிற்பாதியில் பல சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன.
படம் எப்படி ?
கிராண்டியர்.!போகும் போது கட்டிச்சோறு கட்டிட்டு போங்க
சினிமா முரசத்தின் மார்க் : 2.5 /5